Tuesday, April 28, 2009

என்னோடு நீ இரு

நிலவாக நீ இரு,
உன் நினைவாக நான் இருப்பேன்,.......

கனவாக நீ இரு,
துயிலாக நான் இருப்பேன்,.......

வினாவாக நீ இரு,
விடையாக நான் இருப்பேன்,...........

உயிராக நீ இரு,
உன்னுள் உணர்வாக நான் இருப்பேன்,.......
இப்போது தனிமைகள் என்னை சுடுகின்றன....
பயணங்கள் உ ன்னை நினைக்க வைக்கின்றன...........

என்னோடு நீ இரு,
என் கனவிலாவது...................................

கவிதைக்காலம்

வெய்யில் காலம் ஞாபகபடுத்துகிறது
உன் கோபத்தை
மழை காலம் ஞாபகபடுத்துகிறது
உன் கண்ணீரை


இலையுதிர் காலம் ஞாபகபடுத்துகிறது
உன் கருணையை
குளிர் காலம் ஞாபகபடுத்துகிறது
உன் குணத்தின் மேன்மையை

என் கவிதைக்காலம் என்றுமே
ஞாபகபடுத்தும் உன்னை

உன் நினைவுகள்

என் கனவுகள் கற்பனைகளாய்
மிதக்கின்றன - கண்நீர்கடலில்

கப்பலாக்கி விடாதே-மூழ்கிவிடும்
நிலவாக்கிவிடு - என்றும் உன் நினைவில்

புதிய தத்துவம்

நீ அதிகம்
நேசிக்கும் ஒன்றை,
நீ விட்டு சென்றாலும்,
அது உன்னை தேடி வரும்

இரவு

இமைகளை மூடி
மனதினை திறந்து
உன் கனவினை பார்
வண்ணத்து பூச்சி பறந்து திரிவதை போல
உன் சிந்தனைகளையும் பறக்க விடு
அது சுற்றிதிரியட்டும் இந்த உலகத்தை
கடந்தும்