Wednesday, July 22, 2009

உன் ஆர்வம்

நான் வெற்று காகிதம் அனுப்பினாலும்
அதையும் திருப்பி
பார்க்கிறாய்
என் கவிதை இருக்குமென்று.....

அவளை போல்


மழை துளியே நீ


அழகாய் இருக்கிறாய்


என்னவளின் நெற்றி பொட்டைபோல..


வானவில்லே,


நீயும் அழகாய் இருக்கிறாய்


என்னவளின் ஆடையை போல

கவிதை வரிகள்

கடல் அலை என் கவிதையாக,

மழைத்துளிமுற்றுபுள்ளி ஆனாலும்,

பனிக்காற்று வீசிகொண்டிருக்கும்

என் கவிதை வரிகளில்...

பனிக்காற்று

வானமாக நீ - மேகமாக நான்
கண்ணீர் மழை பொழியாதே
கானல் நீராகவும் இருக்காதே

இப்படிக்கு
பனிக்காற்று

கவிதை


வானத்தின் கண்ணீர் - மழை

என் பேனாவின் கண்ணீர் - கவிதை

இயற்கை


வழிந்து கொண்டு இருக்கிறாய் -
அருவியாய்சிரித்து கொண்டு இருக்கிறாய் - தென்றலாய்மென்மையாக்குகிறாய் -
புல்வெளிகலாய்சுற்றித்திரிகிறாய் - மேகங்களாய்

என் இனிய இயற்கையே

கைகுட்டை

என் கண்களோடு உறவாடுகிறாய்

கண்ணீரை சுமக்கிறாய்

நீயும் என் நண்பன் தான்என்

இனிய கைகுட்டையே

மழை

மேகமே நீ விட்டு பிரிவதாலோ
வானம் அழுகிறது

மழை...

Wednesday, July 8, 2009

தேன் கூடு

நிலவாக நீ,

உன் நினைவுகளாக சிதறி கிடக்கின்றன

நட்சத்திரங்கள்..

கருமேகங்களாய் கண்ணை மறைக்கின்றன

என் தவறுகள்

தினம் விடிகிறது உன் நினைவுகளோடு.

ஒதுக்கி வைத்த பின்னும் அலைகிறது,

கலைத்துவிட்ட தேன் கூட்டை போல