Thursday, July 8, 2010

என் நினைவில்


நான்

விழித்தெழும்போது நீ பனியாக வருகிறாய்
அருந்தும்போது சுவையாக வருகிறாய்
உண்ணும்போது மணமாக வருகிறாய்

படிக்கும்போது கவிதையாக வருகிறாய்
எழுதும்போது தமிழாக வருகிறாய்
பேசும்போது வார்த்தையாக வருகிறாய்

சுவாசிக்கும்போது காற்றாக வருகிறாய்
உதவும்போது கரமாக வருகிறாய்
உறங்கும்போது கனவாக வருகிறாய்

என்று நீ
என் மனைவியாக போகிறாய்.....

No comments:

Post a Comment