Wednesday, June 30, 2010

தாஜ் மஹால்

காதலி உறங்கினாள்

காதல் விழித்தெழுந்தது

வெண்மை நிறத்தினில்...

a bouquet to you


i send a bouquet to you,
it has green, white and red roses,

green for your kindness
white for your patiene
red for your anger

but, they are all so angry on u
dont keep with you all.
because they felt,


how to live and born beautiful
atleast in next birth like you.

ஞானம்



சில நேரங்களில் சில விஷயங்கள்


நமக்கு அனுபவத்தை கொடுக்கும்.....


சில நேரங்களில் சில அனுபவங்கள்


நமக்கு பலவற்றை கற்றுகொடுக்கும்...

Tuesday, June 29, 2010

நண்பன்

உன்னை பார்த்த முதல் கவிதை எழுதினேன்

உன்னை படித்த முதல் உன் ரசிகன் ஆனேன்

உன்னுடன் பழகியதால் அறிஞன் ஆனேன்
உன்னோடு என்றும்

இந்த இனிய நண்பன்
கணேஷ்.சு

Wednesday, July 22, 2009

உன் ஆர்வம்

நான் வெற்று காகிதம் அனுப்பினாலும்
அதையும் திருப்பி
பார்க்கிறாய்
என் கவிதை இருக்குமென்று.....

அவளை போல்


மழை துளியே நீ


அழகாய் இருக்கிறாய்


என்னவளின் நெற்றி பொட்டைபோல..


வானவில்லே,


நீயும் அழகாய் இருக்கிறாய்


என்னவளின் ஆடையை போல

கவிதை வரிகள்

கடல் அலை என் கவிதையாக,

மழைத்துளிமுற்றுபுள்ளி ஆனாலும்,

பனிக்காற்று வீசிகொண்டிருக்கும்

என் கவிதை வரிகளில்...

பனிக்காற்று

வானமாக நீ - மேகமாக நான்
கண்ணீர் மழை பொழியாதே
கானல் நீராகவும் இருக்காதே

இப்படிக்கு
பனிக்காற்று

கவிதை


வானத்தின் கண்ணீர் - மழை

என் பேனாவின் கண்ணீர் - கவிதை

இயற்கை


வழிந்து கொண்டு இருக்கிறாய் -
அருவியாய்சிரித்து கொண்டு இருக்கிறாய் - தென்றலாய்மென்மையாக்குகிறாய் -
புல்வெளிகலாய்சுற்றித்திரிகிறாய் - மேகங்களாய்

என் இனிய இயற்கையே

கைகுட்டை

என் கண்களோடு உறவாடுகிறாய்

கண்ணீரை சுமக்கிறாய்

நீயும் என் நண்பன் தான்என்

இனிய கைகுட்டையே

மழை

மேகமே நீ விட்டு பிரிவதாலோ
வானம் அழுகிறது

மழை...

Wednesday, July 8, 2009

தேன் கூடு

நிலவாக நீ,

உன் நினைவுகளாக சிதறி கிடக்கின்றன

நட்சத்திரங்கள்..

கருமேகங்களாய் கண்ணை மறைக்கின்றன

என் தவறுகள்

தினம் விடிகிறது உன் நினைவுகளோடு.

ஒதுக்கி வைத்த பின்னும் அலைகிறது,

கலைத்துவிட்ட தேன் கூட்டை போல

Saturday, June 27, 2009

உன் முகவரி

காலைப்பனி - உன் திரை திறக்கும் இமையின் வரவேற்பு

காலை தென்றல் - உன் மூச்சுக்காற்றின் முகவரி

மாலை வெய்யில் - உன் கோபத்தின் குவியல்

இரவு நேர கனவு - உன் இதயத்தின் தேடல்

Sunday, June 21, 2009

வர்ணங்கள்


வானமே உனக்கு வர்ணம் தீட்ட நினைத்தேன்
வானவில்லை வரைந்தேன்...

துயிலே உன்னை சுகமாக்க நினைத்தேன்
அவளின் நினைவுகளை கொடுத்தேன்....

நிலவே உன்னை அழகாக்க நினைத்தேன்
அவளின் நெற்றிபொட்டை
உனக்கு வைத்தேன்..

காதலே உன்னை மறவாதிருக்க நினைத்தேன்
அவளின் நினைவுகளோடு இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்....


Friday, June 19, 2009

உன்னைப்பற்றி...

காலைத்தென்றல் ,


உன் மூச்சுக்காற்றின் முகவரி


மாலை வெய்யில்,


உன் கோபத்தின் குவியல்


இரவின் கனவு,


உன் இதயத்தின் தேடல்


காலைப்பனி,


உன் திரை திறக்கும் இமையின் வரவேற்பு



Saturday, May 16, 2009

என் உயிர் தோழியே

கண்டேன் கண்டேன் உன்னை கண்டேன்

கண்ட நாள் முதல் நட்பு கொண்டேன்

வெட்கத்தின் உருவமும் நீ,

துக்கத்தின் தூரமும் நீ,

கோபத்தின் பிறப்பிடம் நீ,

நட்பின் இருப்பிடம் நீ,

கொலுசெழுப்பும் ஓசையும் நீ,

எழுத முடியா பாஷையும் நீ,

அன்னைபோல் அரவணைத்தவளும் நீ,

அக்கா போல் அறிவுறுத்தியவளும் நீ,

பெண் நட்புக்கு இலக்கணம் நீ...

Saturday, May 9, 2009

என் நினைவுகள்

* என் கண்கள் கலங்கும் போது,
கண்ணீராக வருகிறாய்...
* சிரிக்கும் போது,

புன்னகையாக வருகிறாய்...
* எழுதும் போது,

கவியாக வருகிறாய்...
* நான் எங்கு சென்றாலும் நீ

என்னுடனே வருகிறாய்....

$ என் நிழலாய், நினைவுகளாய் $

Wednesday, May 6, 2009

எதிரிகள்

எனக்குள்ளே தான் எத்தனை எதிரிகள்

என் எழுதுகோல் கூட

உனைப்பற்றி தான் எழுதுகிறது....

உன் நினைவுகள்

உன் நினைவுகளுக்கு

உயிர் இருப்பது

இன்றுதன் எனக்கு தெரிந்தது!!!

ஏனென்றால்,

என் வாழ்க்கையில் அல்லவா அது

விளையாடுகிறது........

ரசனை

என் கண்களுக்குத்தான் எத்தனை ரசனை,,,,,,

இமை மூடிய பிறகுதான் அது உன்னை தரிசிக்கிறது

நம்பிக்கை

உயரமாக இருக்கும் கட்டிடத்தினை பார்க்கும் போது

எனக்குள் கர்வம் ஏற்படும்

நானும் இப்படி உயர்ந்து நிற்பேன், ஒருநாள்

அந்த உச்சி தளத்தில்

அழகு

கனவும் அழகு, என் உறக்கத்தினால்

மாலை அழகு, உன் துறக்கத்தினால்

காற்றும் அழகு, உன்னோடு நடப்பதினால்

இதயம் அழகு, உனக்காக துடிப்பதினால்

உன்னை நினைக்கிறேன்

உனக்கும் எனக்கும் என்னடி பந்தம்,

இருந்தும், உன் நினைவுகள் எனக்கே சொந்தம்

உயிருக்குள் ஏதோ சத்தம்,

அது கனவினில் நீ கொடுத்த முத்தம்..

தினம் உன்னை நினைக்கிறேன்...

நித்தம்' நித்தம்'

என் காதலை சொல்ல

நான் தினமும் உன்னை தேடி அலைகிறேன்,

அந்த நிலவினைபோல..........

சுற்றிதிரிகிறேன்,

பூமியைபோல.........

கண்ணீர் வடிக்கிறேன்,

மேகத்தைபோல.........

கதறி அழுகிறேன்,

இடியைபோல...........

என் காதலை உன்னிடத்தில் சொல்ல