Tuesday, February 17, 2009

பிரியா விடை


நண்பனே,
பிரிவு நம்மை பிரித்தாலும்
உறவு நம்மை இணைக்கிறது
ஆம், நட்பெனும் உறவு
இரு உள்ளங்கள் இணைக்கும்
காதலிலும் தோல்வியுண்டு
நட்பில் அது இல்லை
என் புரிந்துகொள்....

நண்பனே,
அண்டங்களில் மிதக்கும்
பூமியெனும் உருண்டையில்
ஒப்பற்ற ஒரே உறவாம் நட்பு
உன் பிரிவிற்காக உள்ளம் ஏங்குகிறது..

நட்பே,
உன்னைப்பற்றி எழுத வார்த்தைகளை தேடினேன்,
கிடைக்கவில்லை!
நட்பெனும் வார்த்தைக்கு பொருளறிந்தேன்
உன்னிடத்தில் எதையும் எதிர் பாராதது! என

இலைச்சருகுகள் என்னவோ
காய்தலை அறியாது,
நானும் உன் பிரிவை
இதுவரை அறியவில்லை,

காதலனாய் இருந்துப்பார்
முடியாது மனதினை கட்டுப்படுத்த

தூய நண்பனாய் இருந்து பார்
முடியாது அவனிடம் பொய் சொல்ல...

இவ்வுலகினில்,
காதலின்றி வாழ்வது கடினம்
நட்பின்றி வாழ்வது மிககடினம்

எங்கெங்கோ பிறந்தோம்
எங்கெங்கோ படித்தோம்
கல்லூரியில் இணைந்தோம்
நட்போடு மகிழ்ந்தோம்
குடும்பமாய் வாழ்ந்தோம்
சிறு கண்ணீரோடு பிரிவோம்

உண்மை கவிதை எழுத்தினில் தெரியும்
உண்மை காதல் மனதினை அறியும்
உண்மை உறவுகள் வறுமையில் தெரியும்
உண்மை நட்பு துன்பத்தினில் புரியும்

காதலுக்கு எல்லை உண்டு
நட்புக்கு அது இல்லை.....

நண்பனே உனக்காக,,,,
வார்த்தைதுளிகளோடு

கண்ணீர்துளிகளும்....................

Thursday, February 5, 2009

பிறந்த நாள் வாழ்த்து


நீ பிறந்தது அன்று


உன்னை வாழ்த்த என்


கவிப்பூக்கள் பிறந்தது இன்று.....

காகித பூக்கள்



காகித பூக்கள் உதிர்வதில்லை


காரணம்,


அவற்றிற்கு இதயமில்லை...................



எழுத்துக்கள்



என் கவிகளை உனக்கு அனுப்பினேன்

நீ படிப்பதற்காக மட்டுமல்ல

என் எழுத்துக்கள் உன்னை பார்க்க விரும்பியதால்...........


Tuesday, February 3, 2009

உண்மைக்காதல்

யுத்தத்தில் தொடங்கி

முத்தத்தில் உதிர்ந்து

மணக்கோலத்தில் நுழைந்து

மலர்ப்பக்கத்தில் இருந்து

ஈரைந்து மாதத்தை கடந்து

மழலை சப்தத்திலும் முடியாதது
காதல்........................

Monday, February 2, 2009

கர்வம்

உயரமாக இருக்கும் கட்டிடங்களை

பார்க்கும்போது எனக்குள் ஒரு

கர்வம் ஏற்படும்.............

நானும் இப்படி ஒருநாள்

உயர்ந்து நிற்பேன் உன்மீதேறி........