Saturday, May 16, 2009

என் உயிர் தோழியே

கண்டேன் கண்டேன் உன்னை கண்டேன்

கண்ட நாள் முதல் நட்பு கொண்டேன்

வெட்கத்தின் உருவமும் நீ,

துக்கத்தின் தூரமும் நீ,

கோபத்தின் பிறப்பிடம் நீ,

நட்பின் இருப்பிடம் நீ,

கொலுசெழுப்பும் ஓசையும் நீ,

எழுத முடியா பாஷையும் நீ,

அன்னைபோல் அரவணைத்தவளும் நீ,

அக்கா போல் அறிவுறுத்தியவளும் நீ,

பெண் நட்புக்கு இலக்கணம் நீ...

Saturday, May 9, 2009

என் நினைவுகள்

* என் கண்கள் கலங்கும் போது,
கண்ணீராக வருகிறாய்...
* சிரிக்கும் போது,

புன்னகையாக வருகிறாய்...
* எழுதும் போது,

கவியாக வருகிறாய்...
* நான் எங்கு சென்றாலும் நீ

என்னுடனே வருகிறாய்....

$ என் நிழலாய், நினைவுகளாய் $

Wednesday, May 6, 2009

எதிரிகள்

எனக்குள்ளே தான் எத்தனை எதிரிகள்

என் எழுதுகோல் கூட

உனைப்பற்றி தான் எழுதுகிறது....

உன் நினைவுகள்

உன் நினைவுகளுக்கு

உயிர் இருப்பது

இன்றுதன் எனக்கு தெரிந்தது!!!

ஏனென்றால்,

என் வாழ்க்கையில் அல்லவா அது

விளையாடுகிறது........

ரசனை

என் கண்களுக்குத்தான் எத்தனை ரசனை,,,,,,

இமை மூடிய பிறகுதான் அது உன்னை தரிசிக்கிறது

நம்பிக்கை

உயரமாக இருக்கும் கட்டிடத்தினை பார்க்கும் போது

எனக்குள் கர்வம் ஏற்படும்

நானும் இப்படி உயர்ந்து நிற்பேன், ஒருநாள்

அந்த உச்சி தளத்தில்

அழகு

கனவும் அழகு, என் உறக்கத்தினால்

மாலை அழகு, உன் துறக்கத்தினால்

காற்றும் அழகு, உன்னோடு நடப்பதினால்

இதயம் அழகு, உனக்காக துடிப்பதினால்

உன்னை நினைக்கிறேன்

உனக்கும் எனக்கும் என்னடி பந்தம்,

இருந்தும், உன் நினைவுகள் எனக்கே சொந்தம்

உயிருக்குள் ஏதோ சத்தம்,

அது கனவினில் நீ கொடுத்த முத்தம்..

தினம் உன்னை நினைக்கிறேன்...

நித்தம்' நித்தம்'

என் காதலை சொல்ல

நான் தினமும் உன்னை தேடி அலைகிறேன்,

அந்த நிலவினைபோல..........

சுற்றிதிரிகிறேன்,

பூமியைபோல.........

கண்ணீர் வடிக்கிறேன்,

மேகத்தைபோல.........

கதறி அழுகிறேன்,

இடியைபோல...........

என் காதலை உன்னிடத்தில் சொல்ல