Tuesday, July 20, 2010

எனக்கு பிடித்தவை:)

எனக்கு பிடித்தவை:)

உன் பெயர் - உன்னால் அழகாகும் என் பெயர்

உன் சிரிப்பு - என்னை சிரிக்க வைக்கும் உன் அழகு

உன் அழுகை - என்னையும் கலங்க வைக்கும்

உன் எதிர்பார்ப்பு - அதுவே என்னுடையதும்

உன் வருகை - காத்துகொண்டிருக்கிறேன்

உன் புன்முறுவல் - என்னையும் சிரிப்பூட்டுகின்றன

உன் அடக்கம் - அது உந்தன் வெட்கத்தின் அடையாளம்

உன் மனிதாபிமானம் - அது உந்தன் குணாதிசயம்

உன் நேர்மை - என்னிடம் இருந்து தொற்றி கொண்டதோ

உன் கள்ளத்தனம் - அது உந்தன் அழகு

என் கவிதைகள்






Monday, July 19, 2010

நட்பு


நினைவுகள் என்றும் பிரிவதில்லை
அதை,
நெஞ்சம் எப்போதும் மறப்பதில்லை
நட்பும் அதை போலதான்.....
அவர்களை பிரிந்த பின்பு,
காலம் கடந்து,
நம் வாழ்க்கை சரித்திரத்தை
புரட்டி பார்க்கும் போது,
இனிய நினைவுகளாய் இந்த "slam book "
உங்கள் வாழ்க்கையில் வீற்றிருக்கும்....
என்றும் உங்கள் நினைவுகள் மலர....

மலரும் நினைவுகளாய்

Tuesday, July 13, 2010

முயற்சி


மனிதா,

உன் மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல

உன் முயற்சி நின்றால் கூட மரணம் தான்

- Dr.A.P.J. அப்துல் கலாம்.

Monday, July 12, 2010

பூவை சூடிக்கொள்ளாதே

பூக்கள் உனக்காக பூத்து குலுங்குகின்றன...
அவசரப்பட்டு அவற்றை பறித்து
உன் கூந்தலில் சூடிக்கொள்ளாதே

அவை, உன் முகத்தையும்
உன் சிரிப்பையும் பார்க்க துடிக்கின்றன...

Friday, July 9, 2010

என் இதயம்

என் இதயம் எனக்கு துரோகி

அது உனக்காகவே

அதிகம் துடிக்கிறது....



ஆனால், அதற்குள்

நீ அல்லவா குடியிருக்கிறாய்...

Thursday, July 8, 2010

அவள் சிரிப்பு

அழகாய் சிரிக்கிறாள்

பயமாய் இருக்கிறது

அவள் கன்னக்குழியினில்

விழுந்து விடுவேனோ

என்று...

என் நினைவில்


நான்

விழித்தெழும்போது நீ பனியாக வருகிறாய்
அருந்தும்போது சுவையாக வருகிறாய்
உண்ணும்போது மணமாக வருகிறாய்

படிக்கும்போது கவிதையாக வருகிறாய்
எழுதும்போது தமிழாக வருகிறாய்
பேசும்போது வார்த்தையாக வருகிறாய்

சுவாசிக்கும்போது காற்றாக வருகிறாய்
உதவும்போது கரமாக வருகிறாய்
உறங்கும்போது கனவாக வருகிறாய்

என்று நீ
என் மனைவியாக போகிறாய்.....

Tuesday, July 6, 2010

ஒருதலைக் காதல்


அவன் கானலுக்குள்


மீன் பிடித்தான்


ஒருதலைக் காதல்

அக அழகு


தோற்றத்தை விட


குரல் அழகு


குயில்

my finding

usually i write poems,

but sometimes

i write ur name also

அடையாளம்


புன்னகை முகத்தின் அடையாளம்

வெட்கம் பெண்மையின் அடையாளம்

கனவு அது உந்தன் அடையாளம்

கவிதை இது எந்தன் அடையாளம்

Wednesday, June 30, 2010

தாஜ் மஹால்

காதலி உறங்கினாள்

காதல் விழித்தெழுந்தது

வெண்மை நிறத்தினில்...

a bouquet to you


i send a bouquet to you,
it has green, white and red roses,

green for your kindness
white for your patiene
red for your anger

but, they are all so angry on u
dont keep with you all.
because they felt,


how to live and born beautiful
atleast in next birth like you.

ஞானம்



சில நேரங்களில் சில விஷயங்கள்


நமக்கு அனுபவத்தை கொடுக்கும்.....


சில நேரங்களில் சில அனுபவங்கள்


நமக்கு பலவற்றை கற்றுகொடுக்கும்...

Tuesday, June 29, 2010

நண்பன்

உன்னை பார்த்த முதல் கவிதை எழுதினேன்

உன்னை படித்த முதல் உன் ரசிகன் ஆனேன்

உன்னுடன் பழகியதால் அறிஞன் ஆனேன்
உன்னோடு என்றும்

இந்த இனிய நண்பன்
கணேஷ்.சு

Wednesday, July 22, 2009

உன் ஆர்வம்

நான் வெற்று காகிதம் அனுப்பினாலும்
அதையும் திருப்பி
பார்க்கிறாய்
என் கவிதை இருக்குமென்று.....

அவளை போல்


மழை துளியே நீ


அழகாய் இருக்கிறாய்


என்னவளின் நெற்றி பொட்டைபோல..


வானவில்லே,


நீயும் அழகாய் இருக்கிறாய்


என்னவளின் ஆடையை போல

கவிதை வரிகள்

கடல் அலை என் கவிதையாக,

மழைத்துளிமுற்றுபுள்ளி ஆனாலும்,

பனிக்காற்று வீசிகொண்டிருக்கும்

என் கவிதை வரிகளில்...

பனிக்காற்று

வானமாக நீ - மேகமாக நான்
கண்ணீர் மழை பொழியாதே
கானல் நீராகவும் இருக்காதே

இப்படிக்கு
பனிக்காற்று

கவிதை


வானத்தின் கண்ணீர் - மழை

என் பேனாவின் கண்ணீர் - கவிதை

இயற்கை


வழிந்து கொண்டு இருக்கிறாய் -
அருவியாய்சிரித்து கொண்டு இருக்கிறாய் - தென்றலாய்மென்மையாக்குகிறாய் -
புல்வெளிகலாய்சுற்றித்திரிகிறாய் - மேகங்களாய்

என் இனிய இயற்கையே

கைகுட்டை

என் கண்களோடு உறவாடுகிறாய்

கண்ணீரை சுமக்கிறாய்

நீயும் என் நண்பன் தான்என்

இனிய கைகுட்டையே

மழை

மேகமே நீ விட்டு பிரிவதாலோ
வானம் அழுகிறது

மழை...

Wednesday, July 8, 2009

தேன் கூடு

நிலவாக நீ,

உன் நினைவுகளாக சிதறி கிடக்கின்றன

நட்சத்திரங்கள்..

கருமேகங்களாய் கண்ணை மறைக்கின்றன

என் தவறுகள்

தினம் விடிகிறது உன் நினைவுகளோடு.

ஒதுக்கி வைத்த பின்னும் அலைகிறது,

கலைத்துவிட்ட தேன் கூட்டை போல