Wednesday, June 1, 2011

நினைவுகள் களவாடப்படும் போதும்,

கண்கள் நம்மை அறியாமல் திரும்பும் போதும்,

கால்கள் பூங்காவின் புற்களை தேடும் போதும்,

காரணமே இல்லாமல் மனமும் புத்தியும்

இசையை ரசிக்கும் போதும்,

நம் மனதிற்குள் காதல் பூத்திருக்கும்...

கவிதைக்கு வடிவம் தரும் காதலே வாழ்க...

வெற்றி

சுலபமாக வெற்றி அடைபவன்,
அதில் மட்டுமே
வெற்றி கொள்கிறான்...


பல தோல்விகளுக்குப்பின்,
வெற்றி கொள்பவனே,
நன்கு சோதிக்கப்படுகிறான்..

அவனே வாழ்விலும்
வெற்றி கொள்கிறான்.

காதல்

Wednesday, September 1, 2010

காத்திருக்கிறேன்

காத்திருத்தல்
எனக்கு பிடிக்காத ஒன்று...

யாருக்காகவும் காத்திருப்பது
எனக்கு பிடிக்கவில்லை...
யாரையும் நான்
காத்திருக்க வைப்பதுமில்லை....
ஆனால்,
இங்கே
நான் பல வருடங்களாக
காத்துகொண்டிருக்கிறேன்

உனக்காக
உன் வருகைக்காக.....
என் கவிதைகளோடு

விக்கல்


Saturday, August 14, 2010

ஏக்கம்


அழகு


கனவு




கல்வி பற்றி என் கருத்து

கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. கல்வி மனிதனை மனிதனாகவே இருக்க வைக்கிறது.. உலகிலேயே சிறந்தது கண்தானம், ரத்ததானம், அன்னதானம் என்று பல கருத்துக்கள் உண்டு.. ஆனால் உண்மை என்னவென்றால், கல்வி தானம் இந்த மூன்றையும் விட சிறந்தது.. ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு, பாடசாலைக்கு சென்றால் மட்டுமே கிடைப்பதில்லை... நாம் கல்வியை அன்றாடம் பழகும் மனிதர்களிடமிருந்தும், நாம் பேசும், உரையாடும், தவறு செய்யும் சில விஷயங்களிலும் இருந்தும் கற்றுகொள்கிறோம்... நாம் சந்திக்கும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு செயலும், ஏதோ ஒன்றை நமக்கு சொல்லித்தருகிறது... அதை சிலர் புரிந்து கொள்ளாமலே கற்கின்றனர்..... ஒரு திறமைமிக்க வல்லரசு நாடு என்பது, நல்ல சமுதாயத்தை கொண்டே அமைகிறது... அது மாணவர் சமுதாயம்... தொழில் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும், வியாபார சக்தியிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கும் பல நாடுகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத்தான் இருக்கும்... அந்நாடுகள் கல்வியை ஊக்குவிக்கின்றதோ இல்லையோ, நல்ல கல்வி பயின்ற திறமையுடைய மனிதர்களை வைத்து, நாட்டின் வளர்ச்சியை பெருக்கிகொள்கிறது..... ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அவசியம்... இன்றும் பல கிராமங்களில், பள்ளிகூடங்கள் இல்லாத நிலை நீடித்துகொண்டிருக்கிறது.... அதுமட்டுமல்லாது, பல குழந்தைகள், மாணவர்கள் பல தூரம் பிரயாணித்தும், நடந்து சென்றும் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது... நம் பிரதமர் ஏற்படுத்திய திட்டம், ஊருக்கு ஒரு பள்ளி, ஐந்து கிலோமீட்டர்க்குள் ஒரு பாடசாலை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது... இருந்தும், இன்றும் பல கல்லூரிகளில் சில ஆசிரியர்களும் சரிவர வருவதில்லை, ஒரு தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில்லை..... நகரங்களில், சில பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் சரிவர செல்வதில்லை... தயவு செய்து மாணவர்களே படியுங்கள் உங்களுக்காகவும் நாட்டிற்காகவும்..... கிரிக்கெட்டில் மட்டும் தலை நிமிர்ந்து நின்றால் போதாது, நாட்டின் வளர்ச்சியிலும் நாம் உயர்ந்து நிற்க வேண்டும்..... உங்கள் கல்வி இந்திய ராணுவ படையை விட சக்திவாய்ந்ததாகும்... உங்களின் இன்றைய உழைப்பு (கல்வி) நாளைய இந்திய வரலாறு.....
இந்தியா நிச்சயம் 2020 ல் வல்லரசாகும் என்ற நம்பிக்கையில்...

Monday, August 9, 2010

உங்களுக்காக நான்

நான் இன்று ஒரு கவிஞன் என்று நினைத்துபார்பதற்கு பெருமையாக இருக்கிறது. எல்லோரும் பொதுவாக நினைப்பது என்னவெனில், கவிதை எழுதுபவர் எல்லாம், காதல் வசப்பட்டவர்கள் தான் என நினைக்க தோன்றும்.. அப்படியெல்லாம் இல்லை... காதல் என்பது அன்பு, ஒன்றின் மீது நாம் வைக்கும் ஈடுபாடு, நம்பிக்கை, உணர்ச்சி, ஆசை, கவனம் போன்றவையே நமக்கு அதின் மீது, ஒரு ஈர்ப்பு உண்டாக காரண மாக அமைகிறது... ஒரு விஷயத்தை ஆழமாக நேசித்தால் போதும், அதை பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ளலாம், எதை நாம் தெரிந்து கொள்ள வில்லையோ அதை நாம் நேசிக்கவில்லை என்று அர்த்தம். சரி, விஷயத்துக்கு வருவோம், நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துகொண்டு இருக்கையில், எங்கள் economic professor எங்களை, தாய் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி வரசொன்னார், அப்போது என் நண்பன் ஒருவன், அழகான தமிழில் ஒரு கவிதை வரைந்தான்... அவனின் ஆர்வமும் கவிதை நயமும், அவன் ஒன்றின் மெத்து வைக்கும் அபிமானமும் எனக்கு மிகவும் பிடித்தது.. அதுவே என்னை கவிதை வரைய தூண்டியது... வாழ்க்கையில், எல்லா மாணவர்களும் பள்ளி, கல்லூரி பருவத்தை கடந்து வருகிறார்கள்... அவள் கடக்கும் பாதையில் பல முட்களும் பல பூக்களும் இருந்திருக்கும்... வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று, இளமைபருவத்திலேயே கற்றுக்கொள்ளத்தான் நமக்கு சொல்லித்தருகிறது.. யார் யாரிடம் பழக வேண்டும், எந்தெந்த தவறான பழக்கத்தை நாம் ஒதுக்கவேண்டியது, யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை பற்றி..... அதுமட்டுமல்ல, வாழக்கையில் நட்பு, காதல் இந்த இரண்டையும் நாம் காண்பது இப்பருவதிலே.... நம் வாழ்க்கை, நம் எண்ணம், நம் சிந்தனை, நம் குணாதிசயம் (கேரக்டர்) நாம் சேரும், நம்மோடு இருக்கும் பழகும் நண்பர்களை பொறுத்தே அமைகிறது..... ஆகவே, பள்ளிபருவத்தில், கற்றுக்கொள்ளுங்கள் நல்லவற்றை, தெரிந்துகொள்ளுங்கள் நல்ல நண்பர்களை, விலகி நில்லுங்கள் தீயவர்களிடம் இருந்து, வாழுங்கள் உங்கள் வாழ்க்கையை இன்பமாக...

Thursday, August 5, 2010

நண்பனே உனக்காக...

நண்பனே,

பிரிவு நம்மை பிரித்தாலும்

உறவு நம்மை இணைக்கிறது

ஆம், நட்பெனும் உறவு


இரு உள்ளங்களை இணைக்கும்

காதலிலும் தோல்வியுண்டு

நட்பில் அது இல்லை ...

நண்பனே,

அண்டங்களில் மிதக்கும்

பூமியெனும் உருண்டையில்

ஒப்பற்ற ஒரே உறவாம் நட்பு,

உன் பிரிவிற்காக உள்ளம் ஏங்குகிறது...

நட்பே,

உன்னை பற்றி எழுத வார்த்தைகளை தேடினேன்

கிடைக்கவில்லை!!!

நட்பெனும் வார்த்தைக்கு பொருளறிந்தேன்...

உன்னிடத்தில் எதையும் எதிர்பாராதது!!! என

இலைச்சருகுகள் என்னவோ

காய்தலை அறியாது,

நானும் உன் பிரிவை,

இதுவரை அறியவில்லை...


காதலனாய் இருந்துப்பார்,

முடியாது மனதின கட்டுபடுத்த...

தூய நண்பனாய் இருந்துப்பார்,

முடியாது அவனிடம் பொய் சொல்ல...

இவ்வுலகினில்,

காதலின்றி வாழ்த்திட இயலும்

நட்பின்றி வாழ்வது கடினம்,

நம் வாழ்வில் கடைசிவரை நீடிக்கும்

ஒரே உறவு - நட்பு

எங்கெங்கோ பிறந்தோம்

எங்கெங்கோ படித்தோம்

கல்லூரியில் இணைந்தோம்

நட்போடு மகிழ்ந்தோம்

குடும்பமாய் வாழ்ந்தோம்

சிறு கண்ணீரோடு பிரிவோம்....


உண்மை கவிதை எழுதினால் தெரியும்,

உண்மை காதல் மனதினை அறியும்,

உன்னை உறவுகள் வறுமையில் தெரியும்,

உன்னை நட்பு துன்பதினில் புரியும்...

காதலுக்கு எல்லை உண்டு

நம் பார்வைக்குள் அடங்காத

வானுக்கும் எல்லை உண்டு

நட்புக்கு அது இல்லை

நட்பு உறவுகளை விட மேலானது

வறுமையிலும் மாறாதது...

என்றும் அன்புடன்,

உங்கள் நண்பன்






Wednesday, August 4, 2010

புவியீர்ப்பு விசை




பூவை சுற்றிவரும்
வண்ணத்துபூச்சி போல

என்னை சுற்றித்திரிகின்றன

உன் நினைவுகள்;
அவை இருட்டில் கூட என்னை


விட்டு செல்ல விரும்பவில்லை;;;;