கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. கல்வி மனிதனை மனிதனாகவே இருக்க வைக்கிறது.. உலகிலேயே சிறந்தது கண்தானம், ரத்ததானம், அன்னதானம் என்று பல கருத்துக்கள் உண்டு.. ஆனால் உண்மை என்னவென்றால், கல்வி தானம் இந்த மூன்றையும் விட சிறந்தது.. ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு, பாடசாலைக்கு சென்றால் மட்டுமே கிடைப்பதில்லை... நாம் கல்வியை அன்றாடம் பழகும் மனிதர்களிடமிருந்தும், நாம் பேசும், உரையாடும், தவறு செய்யும் சில விஷயங்களிலும் இருந்தும் கற்றுகொள்கிறோம்... நாம் சந்திக்கும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு செயலும், ஏதோ ஒன்றை நமக்கு சொல்லித்தருகிறது... அதை சிலர் புரிந்து கொள்ளாமலே கற்கின்றனர்..... ஒரு திறமைமிக்க வல்லரசு நாடு என்பது, நல்ல சமுதாயத்தை கொண்டே அமைகிறது... அது மாணவர் சமுதாயம்... தொழில் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும், வியாபார சக்தியிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கும் பல நாடுகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத்தான் இருக்கும்... அந்நாடுகள் கல்வியை ஊக்குவிக்கின்றதோ இல்லையோ, நல்ல கல்வி பயின்ற திறமையுடைய மனிதர்களை வைத்து, நாட்டின் வளர்ச்சியை பெருக்கிகொள்கிறது..... ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அவசியம்... இன்றும் பல கிராமங்களில், பள்ளிகூடங்கள் இல்லாத நிலை நீடித்துகொண்டிருக்கிறது.... அதுமட்டுமல்லாது, பல குழந்தைகள், மாணவர்கள் பல தூரம் பிரயாணித்தும், நடந்து சென்றும் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது... நம் பிரதமர் ஏற்படுத்திய திட்டம், ஊருக்கு ஒரு பள்ளி, ஐந்து கிலோமீட்டர்க்குள் ஒரு பாடசாலை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது... இருந்தும், இன்றும் பல கல்லூரிகளில் சில ஆசிரியர்களும் சரிவர வருவதில்லை, ஒரு தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில்லை..... நகரங்களில், சில பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் சரிவர செல்வதில்லை... தயவு செய்து மாணவர்களே படியுங்கள் உங்களுக்காகவும் நாட்டிற்காகவும்..... கிரிக்கெட்டில் மட்டும் தலை நிமிர்ந்து நின்றால் போதாது, நாட்டின் வளர்ச்சியிலும் நாம் உயர்ந்து நிற்க வேண்டும்..... உங்கள் கல்வி இந்திய ராணுவ படையை விட சக்திவாய்ந்ததாகும்... உங்களின் இன்றைய உழைப்பு (கல்வி) நாளைய இந்திய வரலாறு..... இந்தியா நிச்சயம் 2020 ல் வல்லரசாகும் என்ற நம்பிக்கையில்...
super... about education... iknow to read tamil also...
ReplyDelete