Saturday, January 24, 2009

எந்த கதவும் திறக்கும்


தோல்வி எனும் பள்ளத்தில் விழுந்துகிடக்கும் மனிதா
எழுந்து வா
இதோடு முடிந்துவிடவில்லை உன் வாழ்க்கை
இருக்கிறது இன்னும் சாதிக்க
விரைந்துவா மற்றவருக்கும் போதிக்க

தோல்வி காண்பதே வாழ்க்கைஅல்ல
அதையும் வெற்றியாக்குவதுதான் வாழ்க்கை

இளமை என்பது இலைசருகுபோல போனால் திரும்பவராது
சாதிக்க புறப்படு!

தோல்வியை தோல்வி அடைய செய்
நிலவுகூட வளர்ந்து தேய்ந்து விடுமுறை எடுக்கிறது - அமாவாசையன்று
ஆனால் நீயோ,

உழையாமல் வெற்றிகாண நினைக்கிறாய்;
விட்டுவிடு! இதுவரை நீ செய்த தவறை
துவக்கிடு! உன் வாழ்க்கை பணியை

உன் உடலை நனைப்பது வெறும் கண்ணீர்துளிகளாய் இருக்ககூடாது
வியர்வை துளிகளாய்தான் இருக்க வேண்டும்

உழைத்து வாழ்;
பிறர் உன்னை மதிக்க வாழ் ;
அப்போது தானாகவே திறக்கும் - உன் வெற்றிக்கதவு

நீ தாழ் திறவாமலே.......









2 comments: