Wednesday, July 22, 2009

உன் ஆர்வம்

நான் வெற்று காகிதம் அனுப்பினாலும்
அதையும் திருப்பி
பார்க்கிறாய்
என் கவிதை இருக்குமென்று.....

அவளை போல்


மழை துளியே நீ


அழகாய் இருக்கிறாய்


என்னவளின் நெற்றி பொட்டைபோல..


வானவில்லே,


நீயும் அழகாய் இருக்கிறாய்


என்னவளின் ஆடையை போல

கவிதை வரிகள்

கடல் அலை என் கவிதையாக,

மழைத்துளிமுற்றுபுள்ளி ஆனாலும்,

பனிக்காற்று வீசிகொண்டிருக்கும்

என் கவிதை வரிகளில்...

பனிக்காற்று

வானமாக நீ - மேகமாக நான்
கண்ணீர் மழை பொழியாதே
கானல் நீராகவும் இருக்காதே

இப்படிக்கு
பனிக்காற்று

கவிதை


வானத்தின் கண்ணீர் - மழை

என் பேனாவின் கண்ணீர் - கவிதை

இயற்கை


வழிந்து கொண்டு இருக்கிறாய் -
அருவியாய்சிரித்து கொண்டு இருக்கிறாய் - தென்றலாய்மென்மையாக்குகிறாய் -
புல்வெளிகலாய்சுற்றித்திரிகிறாய் - மேகங்களாய்

என் இனிய இயற்கையே

கைகுட்டை

என் கண்களோடு உறவாடுகிறாய்

கண்ணீரை சுமக்கிறாய்

நீயும் என் நண்பன் தான்என்

இனிய கைகுட்டையே

மழை

மேகமே நீ விட்டு பிரிவதாலோ
வானம் அழுகிறது

மழை...

Wednesday, July 8, 2009

தேன் கூடு

நிலவாக நீ,

உன் நினைவுகளாக சிதறி கிடக்கின்றன

நட்சத்திரங்கள்..

கருமேகங்களாய் கண்ணை மறைக்கின்றன

என் தவறுகள்

தினம் விடிகிறது உன் நினைவுகளோடு.

ஒதுக்கி வைத்த பின்னும் அலைகிறது,

கலைத்துவிட்ட தேன் கூட்டை போல

Saturday, June 27, 2009

உன் முகவரி

காலைப்பனி - உன் திரை திறக்கும் இமையின் வரவேற்பு

காலை தென்றல் - உன் மூச்சுக்காற்றின் முகவரி

மாலை வெய்யில் - உன் கோபத்தின் குவியல்

இரவு நேர கனவு - உன் இதயத்தின் தேடல்

Sunday, June 21, 2009

வர்ணங்கள்


வானமே உனக்கு வர்ணம் தீட்ட நினைத்தேன்
வானவில்லை வரைந்தேன்...

துயிலே உன்னை சுகமாக்க நினைத்தேன்
அவளின் நினைவுகளை கொடுத்தேன்....

நிலவே உன்னை அழகாக்க நினைத்தேன்
அவளின் நெற்றிபொட்டை
உனக்கு வைத்தேன்..

காதலே உன்னை மறவாதிருக்க நினைத்தேன்
அவளின் நினைவுகளோடு இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்....


Friday, June 19, 2009

உன்னைப்பற்றி...

காலைத்தென்றல் ,


உன் மூச்சுக்காற்றின் முகவரி


மாலை வெய்யில்,


உன் கோபத்தின் குவியல்


இரவின் கனவு,


உன் இதயத்தின் தேடல்


காலைப்பனி,


உன் திரை திறக்கும் இமையின் வரவேற்பு



Saturday, May 16, 2009

என் உயிர் தோழியே

கண்டேன் கண்டேன் உன்னை கண்டேன்

கண்ட நாள் முதல் நட்பு கொண்டேன்

வெட்கத்தின் உருவமும் நீ,

துக்கத்தின் தூரமும் நீ,

கோபத்தின் பிறப்பிடம் நீ,

நட்பின் இருப்பிடம் நீ,

கொலுசெழுப்பும் ஓசையும் நீ,

எழுத முடியா பாஷையும் நீ,

அன்னைபோல் அரவணைத்தவளும் நீ,

அக்கா போல் அறிவுறுத்தியவளும் நீ,

பெண் நட்புக்கு இலக்கணம் நீ...

Saturday, May 9, 2009

என் நினைவுகள்

* என் கண்கள் கலங்கும் போது,
கண்ணீராக வருகிறாய்...
* சிரிக்கும் போது,

புன்னகையாக வருகிறாய்...
* எழுதும் போது,

கவியாக வருகிறாய்...
* நான் எங்கு சென்றாலும் நீ

என்னுடனே வருகிறாய்....

$ என் நிழலாய், நினைவுகளாய் $

Wednesday, May 6, 2009

எதிரிகள்

எனக்குள்ளே தான் எத்தனை எதிரிகள்

என் எழுதுகோல் கூட

உனைப்பற்றி தான் எழுதுகிறது....

உன் நினைவுகள்

உன் நினைவுகளுக்கு

உயிர் இருப்பது

இன்றுதன் எனக்கு தெரிந்தது!!!

ஏனென்றால்,

என் வாழ்க்கையில் அல்லவா அது

விளையாடுகிறது........

ரசனை

என் கண்களுக்குத்தான் எத்தனை ரசனை,,,,,,

இமை மூடிய பிறகுதான் அது உன்னை தரிசிக்கிறது

நம்பிக்கை

உயரமாக இருக்கும் கட்டிடத்தினை பார்க்கும் போது

எனக்குள் கர்வம் ஏற்படும்

நானும் இப்படி உயர்ந்து நிற்பேன், ஒருநாள்

அந்த உச்சி தளத்தில்

அழகு

கனவும் அழகு, என் உறக்கத்தினால்

மாலை அழகு, உன் துறக்கத்தினால்

காற்றும் அழகு, உன்னோடு நடப்பதினால்

இதயம் அழகு, உனக்காக துடிப்பதினால்

உன்னை நினைக்கிறேன்

உனக்கும் எனக்கும் என்னடி பந்தம்,

இருந்தும், உன் நினைவுகள் எனக்கே சொந்தம்

உயிருக்குள் ஏதோ சத்தம்,

அது கனவினில் நீ கொடுத்த முத்தம்..

தினம் உன்னை நினைக்கிறேன்...

நித்தம்' நித்தம்'

என் காதலை சொல்ல

நான் தினமும் உன்னை தேடி அலைகிறேன்,

அந்த நிலவினைபோல..........

சுற்றிதிரிகிறேன்,

பூமியைபோல.........

கண்ணீர் வடிக்கிறேன்,

மேகத்தைபோல.........

கதறி அழுகிறேன்,

இடியைபோல...........

என் காதலை உன்னிடத்தில் சொல்ல

Tuesday, April 28, 2009

என்னோடு நீ இரு

நிலவாக நீ இரு,
உன் நினைவாக நான் இருப்பேன்,.......

கனவாக நீ இரு,
துயிலாக நான் இருப்பேன்,.......

வினாவாக நீ இரு,
விடையாக நான் இருப்பேன்,...........

உயிராக நீ இரு,
உன்னுள் உணர்வாக நான் இருப்பேன்,.......
இப்போது தனிமைகள் என்னை சுடுகின்றன....
பயணங்கள் உ ன்னை நினைக்க வைக்கின்றன...........

என்னோடு நீ இரு,
என் கனவிலாவது...................................

கவிதைக்காலம்

வெய்யில் காலம் ஞாபகபடுத்துகிறது
உன் கோபத்தை
மழை காலம் ஞாபகபடுத்துகிறது
உன் கண்ணீரை


இலையுதிர் காலம் ஞாபகபடுத்துகிறது
உன் கருணையை
குளிர் காலம் ஞாபகபடுத்துகிறது
உன் குணத்தின் மேன்மையை

என் கவிதைக்காலம் என்றுமே
ஞாபகபடுத்தும் உன்னை

உன் நினைவுகள்

என் கனவுகள் கற்பனைகளாய்
மிதக்கின்றன - கண்நீர்கடலில்

கப்பலாக்கி விடாதே-மூழ்கிவிடும்
நிலவாக்கிவிடு - என்றும் உன் நினைவில்

புதிய தத்துவம்

நீ அதிகம்
நேசிக்கும் ஒன்றை,
நீ விட்டு சென்றாலும்,
அது உன்னை தேடி வரும்

இரவு

இமைகளை மூடி
மனதினை திறந்து
உன் கனவினை பார்
வண்ணத்து பூச்சி பறந்து திரிவதை போல
உன் சிந்தனைகளையும் பறக்க விடு
அது சுற்றிதிரியட்டும் இந்த உலகத்தை
கடந்தும்

Tuesday, February 17, 2009

பிரியா விடை


நண்பனே,
பிரிவு நம்மை பிரித்தாலும்
உறவு நம்மை இணைக்கிறது
ஆம், நட்பெனும் உறவு
இரு உள்ளங்கள் இணைக்கும்
காதலிலும் தோல்வியுண்டு
நட்பில் அது இல்லை
என் புரிந்துகொள்....

நண்பனே,
அண்டங்களில் மிதக்கும்
பூமியெனும் உருண்டையில்
ஒப்பற்ற ஒரே உறவாம் நட்பு
உன் பிரிவிற்காக உள்ளம் ஏங்குகிறது..

நட்பே,
உன்னைப்பற்றி எழுத வார்த்தைகளை தேடினேன்,
கிடைக்கவில்லை!
நட்பெனும் வார்த்தைக்கு பொருளறிந்தேன்
உன்னிடத்தில் எதையும் எதிர் பாராதது! என

இலைச்சருகுகள் என்னவோ
காய்தலை அறியாது,
நானும் உன் பிரிவை
இதுவரை அறியவில்லை,

காதலனாய் இருந்துப்பார்
முடியாது மனதினை கட்டுப்படுத்த

தூய நண்பனாய் இருந்து பார்
முடியாது அவனிடம் பொய் சொல்ல...

இவ்வுலகினில்,
காதலின்றி வாழ்வது கடினம்
நட்பின்றி வாழ்வது மிககடினம்

எங்கெங்கோ பிறந்தோம்
எங்கெங்கோ படித்தோம்
கல்லூரியில் இணைந்தோம்
நட்போடு மகிழ்ந்தோம்
குடும்பமாய் வாழ்ந்தோம்
சிறு கண்ணீரோடு பிரிவோம்

உண்மை கவிதை எழுத்தினில் தெரியும்
உண்மை காதல் மனதினை அறியும்
உண்மை உறவுகள் வறுமையில் தெரியும்
உண்மை நட்பு துன்பத்தினில் புரியும்

காதலுக்கு எல்லை உண்டு
நட்புக்கு அது இல்லை.....

நண்பனே உனக்காக,,,,
வார்த்தைதுளிகளோடு

கண்ணீர்துளிகளும்....................

Thursday, February 5, 2009

பிறந்த நாள் வாழ்த்து


நீ பிறந்தது அன்று


உன்னை வாழ்த்த என்


கவிப்பூக்கள் பிறந்தது இன்று.....

காகித பூக்கள்



காகித பூக்கள் உதிர்வதில்லை


காரணம்,


அவற்றிற்கு இதயமில்லை...................



எழுத்துக்கள்



என் கவிகளை உனக்கு அனுப்பினேன்

நீ படிப்பதற்காக மட்டுமல்ல

என் எழுத்துக்கள் உன்னை பார்க்க விரும்பியதால்...........


Tuesday, February 3, 2009

உண்மைக்காதல்

யுத்தத்தில் தொடங்கி

முத்தத்தில் உதிர்ந்து

மணக்கோலத்தில் நுழைந்து

மலர்ப்பக்கத்தில் இருந்து

ஈரைந்து மாதத்தை கடந்து

மழலை சப்தத்திலும் முடியாதது
காதல்........................

Monday, February 2, 2009

கர்வம்

உயரமாக இருக்கும் கட்டிடங்களை

பார்க்கும்போது எனக்குள் ஒரு

கர்வம் ஏற்படும்.............

நானும் இப்படி ஒருநாள்

உயர்ந்து நிற்பேன் உன்மீதேறி........

Friday, January 30, 2009

மனச்சிறை

அவள் மனம் எனும் சிறையில் வாழும்
ஆயுள் கைதி நான்...............


கவிகள்

அன்று என் கவிகள் உன்னோடு.......
இன்று உன் நினைவுகள் என்னோடு..............

வெறும் கவிதைகளாய்.........................................

Wednesday, January 28, 2009

ரோஜா

ஏ ரோஜாவே,

அவர்களின் அன்பை பரிமாறிக் கொள்வதற்க்காக

உன்னை இலையிடம் இருந்து பிரித்து விடுகிறார்களே

கவலைப்படாதே,

உனக்காக வருந்துவதற்கு இன்னுமொரு உயிர் இருக்கின்றது...

மறந்து டாதே

நீ உயிர் துறப்பது இன்னொரு
ரோஜாவின் கூந்தலில்................

நினைவுகள்

என் கவியின் முதலீடு

உன்னிடம் கடனாய் வாங்கிய நினைவுகள்

கூந்தல்

ஏ பூவே,

நீ செடியில் இருக்கும் அழகைவிட,

அவள் கூந்தலில் அழகாய் பூத்திருக்கிறாய்..............................

அவள் சூடியதால் நீ அழகாய் இருக்கிறாயா?

உன்னை சூடியதால் அவள் அழகாய் இருக்கிறாளா????????

பூ

கவி தொடுக்க பாக்கள் தேடினேன்

கிடைக்கவில்லை.....

பூக்கள் வைத்து எழுதினேன்

அதுவும் உன்னையே பிரதிபலித்தது

நிலா

கவிஞன் வர்ணிக்கும் புதுக்கவிதை நீ
காதலன் பொய்யில் நாயகி நீ
வான் தேவதையின் திலகம் நீ
சோருண்ணும் மழலையின் பொம்மை நீ
இம்மண்ணில் வாழா மங்கை நீ
இரவில் ஒளிரும் ஆபரணம் நீ
வளர்ந்தே தேயும் முழு வடிவமும் நீ
இக்கவி தலைப்பு நிலவே நீ

கவிஞன் பொய்கள்

என்னவளே நான் உன்னை நினைக்கும்
போதெல்லாம் என்னையே மறக்கிறேன்......................

என்னை மறக்கும் போதெல்லாம்
உன்னையே நினைக்கிறேன்....................

கவிஎழுத தொடங்கி
உன் பெயரெழுதி முடிக்கிறேன்.....

நினைவுகள் நெஞ்சினை சுடுகின்றன
கனவுகள் கூட கனவாய் கண்ணை தழுவுகின்றன

இப்போது நான்,,,

வார்த்தை இல்லா கவி போல.........

இதயம்

என் கனவில் உறங்கி
நினைவில் விழித்திருப்பவளே
என் இதயத்துடிப்பினை கேட்டுப்பார்
அது எனக்காக துடித்ததைவிட
உனக்காக தான் அதிகம் துடித்தது

Saturday, January 24, 2009

எந்த கதவும் திறக்கும்


தோல்வி எனும் பள்ளத்தில் விழுந்துகிடக்கும் மனிதா
எழுந்து வா
இதோடு முடிந்துவிடவில்லை உன் வாழ்க்கை
இருக்கிறது இன்னும் சாதிக்க
விரைந்துவா மற்றவருக்கும் போதிக்க

தோல்வி காண்பதே வாழ்க்கைஅல்ல
அதையும் வெற்றியாக்குவதுதான் வாழ்க்கை

இளமை என்பது இலைசருகுபோல போனால் திரும்பவராது
சாதிக்க புறப்படு!

தோல்வியை தோல்வி அடைய செய்
நிலவுகூட வளர்ந்து தேய்ந்து விடுமுறை எடுக்கிறது - அமாவாசையன்று
ஆனால் நீயோ,

உழையாமல் வெற்றிகாண நினைக்கிறாய்;
விட்டுவிடு! இதுவரை நீ செய்த தவறை
துவக்கிடு! உன் வாழ்க்கை பணியை

உன் உடலை நனைப்பது வெறும் கண்ணீர்துளிகளாய் இருக்ககூடாது
வியர்வை துளிகளாய்தான் இருக்க வேண்டும்

உழைத்து வாழ்;
பிறர் உன்னை மதிக்க வாழ் ;
அப்போது தானாகவே திறக்கும் - உன் வெற்றிக்கதவு

நீ தாழ் திறவாமலே.......









Friday, January 23, 2009

அழகு - பாடல்

அழகே அழகே

உன்னில் எல்லாம் அழகு

கர்வம் இல்லை அதுவே உன்னில் அழகு

களங்கம் இல்லை அதுவும் உன்னில் அழகு

உன்னில் கோபம் இல்லை அதுவும் உன்னில் அழகு

அன்பும் உண்டு அதில் பேதம் இல்லை அதுவே உன்னில் அழகு

என்னோடு பேசிப்பழகு........................

சரணம்:

நீ சிரிக்கும்போது தலை தூக்கும் வெட்கம் உன்னில் அழகு

நீ பேசும்போது கொஞ்சும் குழந்தை பேச்சும் அழகு

வார்த்தை பலபேசும் உன் பார்வை கூட அழகு

கோபமாய் மூச்சுவிடும் உன் சுவாசகாற்றும் அழகு

உன்னில் எல்லாம் அழகு, என்னோடு பேசிப்பழகு........

சரணம்:

நீ நடக்கும் போது கூடவரும் உன் நிழலும் கூட அழகு

நீ அனுதினம் பார்த்து ரசிப்பதால் நிலவும் கூட அழகு

உன் காதலுக்காக நான் ஏங்கும் ஒவ்வொரு நொடியும் அழகு

என் கவிதைகளில் நிறையும் உன் நினைவுகள்தானே அழகு

உனைப்பற்றி எழுதும் தமிழும் கூட அழகு

உன்னில் எல்லாம் அழகு, என்னோடு பேசிப்பழகு.............

வானவில்


வர்ணங்களின் ஜாலம்
வானின் மழைக்கால ரங்கோலி
தூரிகைகளால் வரையதகுந்த ஓவியம்
நிறங்களால் வளைக்க முடிந்த வளைவுகள்
மயிலாட்டத்தின் அடையாளம்




ஒரு ரோஜாவின் குமுறல்


அவள் கூந்தல் சேர முடியாத

ரோஜாவின் குமுறல்:
ஹே பெண்ணே உன் கூந்தல் சேர

என்னால் முடியவில்லை

இந்த சவஊர்வலம் மனிதனுக்கு மட்டுமல்ல

எனக்கும் தான்.
நான் இன்னொரு பிறவி எடுப்பேன்

உன் வீட்டு செடியின் மகளாய் பிறந்துஉன்

கையினால் தடவப்பட்டுஉன் கூந்தலில்

சேர்ந்துஇப்பிறவி பலனை அடைவேன்.
உன் கூந்தலில் சேரதுடிக்கும்

பூவிற்கும்கூட உன்மேல்

எனக்கு இருக்காதா...............